January 8, 2007

ஜென்மம் ஏழுகொண்டேன்



நெற்றியில் பொட்டுமிட்டு
வெய்குழல் தாந்திருத்தி
வட்டக்கரிய விழி- கண்ணம்மா
எனை கட்டி இழுக்குதடி!

பட்டு துணியுடுத்தி
பாத சலங்கை நீபூட்டி
வெட்டும் மின்னலடி- கண்ணம்மா
உன் சுந்தர நடையழகு!

வண்ணக்குஞ்சம் கட்டி
வாரிமஞ்சள் நீபூசி
கொத்தும் பாம்படியோ- கண்ணம்மா
உன் பின்னல் ஜடையழகு!

மெத்த மத்தளமோ
எழில்மொத்தம் பின்னழகே
கொட்டும் முரசடியே - கண்ணம்மா
உன் முட்டும் முன்னழகே!

உனை தீண்டும் போதினிலே
நீ சுடும் தீஞ்கனலே
சொல்லும் மொழிகளிலே- கண்ணம்மா
தேன் தமிழ் மொழியழகே!

ஜென்மம் ஏழுகொண்டேன்
காதலை நெஞ்சில் கண்டேன்
சுத்தரி நீ இல்லையென்றால் -கண்ணம்மா
சொர்கத்தை அடைந்திடுவேன்!

No comments: