December 20, 2006

வேண்டுதல் வேண்டாமை


உனை
எங்கு பார்த்தேன்
என்று ஞயாபகமில்லை

தேடிப்பார்த்ததில்
மொத்தமாய்
உயிரை
ஆக்கிரமித்து
என்னுள் - நீ !

December 19, 2006

கொஞ்சும் கவிதை


இவைவெறும்
வார்த்தைகள்
அல்ல-

என்னுள்
நீ
நடத்திய
வேள்விகளில்
எரிந்துபோக
மறுத்து!

நான்
மலர்ந்த
தருனங்கள்?

திரவியம் தேடு



சேர்த்துவைத்த
முத்தங்கள்
சிதறிபோயின
சில்லரைக்காக..

நான் இங்கே..

என் நாட்டில்
நீ அங்கே..

நமக்கான
நாமெங்கே?

சூட மலர்ந்தது நிலா


என்னவள்
சூட மலர்ந்தது
நிலா..

அவள்
கன்னத்து
மிலிர்தலைக் கண்டு
நாணி-
நாளை மலர்வதாய்
சொல்லி மறைந்த்து..

இதைவிட சிறப்பாய்..

December 18, 2006

இவைகளுக்காய்

நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..

ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..

முதலில்
யாருக்கு கிடைத்தாலும்
அவர்களின் உதடு
கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்...

இருந்தும்..

உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..

அடைக்கும் தாள்


இப்போது-

இருட்டிய
வெளியில்
தன்
இருண்ட
முகத்தை மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!

அப்போது-
இந்த
காதலனுக்கு
இரண்டுமனைவியுண்டு
மானைவியர்க்கும்
கணவன்கள்உண்டு...

காமம் அறுபட்டு
தெருவிற்குவந்தவனுக்கு
அவளருகில்
இப்போது-
இடமும் உண்டு..


இருட்டிய
வெளியில்
தன்
இருண்டமுகத்தை
மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!

அன்புக்கும்
உண்டோ அடைக்கும்
தாள்..

December 17, 2006

வெறியாட்டம்



வன்முறை
வெறியாட்டம்
தன் உச்சத்தை
அடைந்து விட்டதில்..

கருவறைக்குள்
கைகலப்பு..

இரட்டையர்களுக்குள்






மேலும்

wild photos





புண்னகை பூ

நாம் நின்று
பேசிய இடதில்

தேன் குடிக்க
வண்டுகள்
வட்டமிட்டன

நீ சிந்திய
புண்னகை
பூக்களில்..

December 16, 2006

நச்சுபாம்புகள்


காமத்தின்
பசியில்

நவநாகரிக
நச்சுபாம்புகள்
நகரத்தை
நரகமாக்கின..

தன்முகத்தை
கிழித்துக் கொண்டது
காதல்..

தொடர்விருச்சம்

உனக்காய்
உடம்பெல்லாம்
கண்கள்
வைத்தேன்?

உயிருக்குள்
இடமொன்று
ஒதிக்கிவைத்தேன்!

அன்று
தோல்விகளுக்குள்
தொடர்விருச்சம்

இப்போது
தேடுகிறேன்

தொலைத்துபோன
என்
தனித்தன்மையை!

வ(ர)ராதச்சனை


முத்தசுவையில்
இரத்தவெறி-

தூக்கில்
தொங்கினாள்
புதுபெண்..

December 15, 2006

உடைத்துவிடாதே..


என்
கனவு குமிழ்களை
கலையாமல்
அனுப்பிவைகிறேன்..

ரசித்துப்பார்
மறந்தும் கூட
உடைத்துவிடாதே..

உன் உயிர்
அதிலுள்ளது..

சுவடு


கால்கள்
நான்கிருந்தும்

பயணம்
ஒன்றானதால்

சுவடு
இரண்டானது..
காதலில்!

December 14, 2006

நாம் அமரும் நாற்காலி


உயர்தினை
காதல் தோல்வியில்

உடைந்துபோனதோ?
அஃறினை!

காதலின் பின்விளைவு..


இலையுதிர்
காலம் வரை
காத்திருக்கவில்லை
கிழைகள்

இலைகளை
உதிர்த்துவிட்டன

நாம்
அமர்வதை
நிறுத்திக்கொண்டதில்..

பனி


என்மேல்
விழும்
சூரியக்கதிர்களும்
பாரமனது!

பாராமல்?
போகும்- பனி
உன்னால்....

நீயா? நானா?


குளக்கறையில்
நாம்

மீன்களுக்குள்
சண்டை

முதலில்
முத்தமிடுவது
நீயா? நானா?

முடிவிலா


எனக்கும்
உனக்குமான
உறவு!

இரத்தத்தாலும்
தோழா-
சதையாலும்?

ஜன்னல்

எனக்கு
போட்டியாய்
ஒற்றை மலர்
ஜன்னல்
எட்டி பார்கிறது
காதலால்!

December 13, 2006

கருமை


வாழ்க்கையில்
தேடி
வர்ணத்தை
வாரி பூசிக்கொண்டாலும்

கருமை
ஒட்டிக்கொண்டு
கண்சிமிட்டவும்செய்கிறது,,!

காதல்


நீ
நான்
சுற்றி எல்லாம்?

நாம் மட்டும்
தனியே !

குமிழ்கள்


உன்
நினைவு குமிழ்களை
கனவில் உதிர்த்துவிடுகிறாய்

தினமும்
பூக்கொத்தோடு நான்..

வன்முறை


நான் வரைந்த
வண்ணங்களுக்குள்
வன்முறை..

அருகில்
நீ

என்னவள்


புதுக்கவிதை!

மின்னியபடி
எதிர்வீட்டு மாடியில்

என்னவள் !

எச்சம்

குப்பைமேடுகளும்
குடை கேட்கின்றது..

பறவை
சிந்திய எச்சத்தில்
உயிர் வளரும்
இவ்வுலகில்..

வரம்

வராது

என்றேன் நான்!
வந்துவிடும்
என்றான் ஒருவன்!
வந்தாலும்
நிற்காது
என்றான் இன்னோருவன்!
வந்தாலும்
முடியாது
என்றனர் எல்லோறும்!

இறைவா!
வரம் கொடு
இந்த பேருந்தும்
இலங்கை
போரும்
நிற்பதற்கு..

December 4, 2006

அப்போது பணக்கட்டு - இப்போது சில்லறை

அப்போது-

வங்கியில்
வாங்கிய பணக்கட்டு
அங்கேயே எண்ணப்பட்டது
பத்துமுறை.

வீட்டின் மேசையில்
பரப்பப்பட்டு
எண்ணப்பட்டது
இருபதுமுறை.

இருந்தும்
சந்தேகம் தீரவில்லை
தன் கணக்கு
சரியேன்று நம்ப.

இப்போது-

மரண ஊர்வலத்தில்
எண்ணாமல் வீசப்படுகின்றது
சில்லறை காசுகள்.

December 3, 2006

பசி







அவனுக்கு
உடம்பில்
அவளுக்கு
வயிற்றில்

பரிமாறிக்கொண்டார்கள்
.

November 29, 2006

பக்தர்கள்

வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை

அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை

ஆணவம்
ஆறா காயம்
இது
உணர்வதற்குள்
அடங்கிவிடும் காலம்

மனிதனுக்கு
திருந்திய பின்னரே
தண்டனை தரப்படுகிறது

மேல் கோர்ட்டு
அப்பீல் கோயில்கள்

கடவுள் முன்
பக்தர்கள்,,,

வல்லவன்

விட்டில் பூச்சி

வாழ்க்கையில்

வெளிச்சத்தை
துணையாக்குபவன்
புத்திசாலி

இருட்டில்
நடக்க பழகியவன்
அனுபவசாலி

அங்கேயே
அமர்ந்து கொண்டவன்
முட்டாள்

முன்னவனை
பின்னவன்
மிஞ்சினாலும்

வல்லவனுக்கு
வல்லவன் உண்டு
வையகத்தில்..

November 28, 2006

ஆணவம்

அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..

பாராழும் ராஜாவை
போல் - கருவரை
ஆண்டவன்
நான்..

அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..

பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..

தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு

கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..

பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..

கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் - எங்களை..

விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..

விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்...

அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..

என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..

தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்...

November 27, 2006

சிவப்பு செதில்கள்


கசிந்துரிகியது
காதல்-இதயத்தில்
உதிரமாய்..

மடிந்து ஒடிந்தது
மனம்-மரணத்தில்
காதலாய்..

உனக்கும்
எனக்குமான
தூரம் - துள்ளியமாய்
துலங்கியது
தொலைவினில்..

தொட்டுக்கொண்டது
வானம்
பட்டுச்சென்றது
மேகம்

என்னை சுற்றி
மின்னல் - உன்
கண்கள் சுற்றி
மழை

நம்மை சுற்றி
வெளி..

September 26, 2006

தன்னலதாயின் உறவுகளில்..

தன்
மாரழகுக்கு வேக்யானம்
கற்பித்து
சேய்யழ்கை
சீக்கில்விட்டுவிட்டு

தாய் உறவை
தவிடாய் காற்றில்
விட்ட
தன்னலதாயின்
உறவுகளில்

மார்பு காம்புகளுக்காய்
ஏங்கும் - நாங்கள்
எந்தஉறவுகளை
நம்பிகைபிடிப்பது
இவ்வுலகில்

தன்னினப்பாலை
தவிர-எவ்வுயிரும்
ஈந்ததில்லை
பிற உயிரிடம்
மனிதனை தவிர...

ஒட்டுக் கோவணத்தில்
ஒட்டிய காசுக்காய்
ஒன்டிய கூட்டத்தில்
விலை போனாயோ -தாயே

மனம் மாண்ட
மனிதத் தாய்களே
உங்களை விட
நாய்கள் எவ்வள்வோ
மேல்....

உறவுகள் ஊருக்காக...

அப்பாவின் உடலில்
நெஞ்சு தீப்பற்றி
எரிகிறது

உடல் வெந்து
உருக தொடங்கியது
நெற்றி சுருங்கி
வேகத்தடையாகிறது
மயிர் கால்கள்
மாண்டு போகிறது
விரல் நகங்கள்
வீழ்ந்து கிடக்கிறது
மூட்டு கின்னங்கள்
முடங்கி கொள்கிறது
முதுகுத் தண்டு
எழுந்து நிக்கின்றது.......

சடலம்சுடப்பட்டது -
வெட்டியான்
மேற்பார்வையில்

பெயர் பலகை
அகற்றப்பட்டது
மதில் சுவரில்

தபால்காரரின்
வசதிக்காக....!

உறவுகள்
ஊருக்காக...

தாய்மடி வாசம்

தாய்மடி வாசம்
தரனியில் தேடி
தவழ்ந்துகொண்டிருப்பவன்
நான்...

எப்போதவது
கிடைக்கக்கூடும்....

அதுவரை
பொரு மனமே..

தாய்மடி வாசம்
தருபவள்
மனைவியாககூட
இருக்கக்கூடும்....

எனெனில்
வேண்டி பெருவதே
வாழ்க்கை என்பதால்...

எதுவோ அதுவே,,

எதை
எடுத்தாயோ
அது
என்னுள்லிருந்தே
எடுக்கப்பட்டது...

எதை
மறுக்கிறாயோ
அது
என்னுள்ளேயே
புதைக்கப்படுகிறது

எதுவோ
அதுவே
காதலாகி
கசிந்து
என்னுள்
கனிகிறது...

படுக்கையில் நான்...

படுக்கை
துறந்து
பல்துலக்குகிறேன்
கண்ணாடி
முன்

படுக்கையில்
நான்
கண்ணாடியில்

கையில்
காணவில்லை
பல் துலக்கி

படுக்கையில்
நான்...

எனக்காய்

எனக்காய்
ஏங்குகிறது..

பூமாலை
பூக்கடையில்
புது வேட்டி
துணிக்கடையில்

மேளதாளங்கள்
மத்தளக்காரனிம்
பழைய நாற்காலி
பரண் மேல்

இருந்தும்
நடை பிணமாய்...

மனிதனுக்காக அல்ல...

நான்
என்ன செய்துமுடித்தேன்
என்று
என்னை சுற்றி இவ்வளவு
கூட்டம்..
நான்
என்ன சொல்லிவிட்டேன்
என்று நாற்காலி
வனப்பில்ஒய்யாராமய்
நான்..
நான்
எங்கே போகிறேன்
என்றுவண்ணம்
தரித்த பல்லாக்கு
முன் எல்லோரும்...

நிருத்துங்கள்
இந்த
கோமாளித்தனத்தை...
வாசியுங்கள் - என்
மரண வாக்கு மூலத்தை..

மகாத்மாக்களுக்கு
இடையில்-எனை
புதைத்து விடாதீர்கள்
ஜாபாவான்களுக்கு
மேல் வைத்து
எரித்துவிடாதீர்கள்..

மலை உச்சிமேல்
இருந்துஉருட்டி விடுங்கள்
பிணம் திண்ணும்
கழுகளுக்கு இறையாகுகிறேன்..

வழி நெடுக
மலர் தூவி
வண்டுகளை
பட்டினி போடாதீர்..

சதையருது
குளத்தில்இடுங்கள்
மீன்கள் பசியாரட்டும்..

மிஞ்சிய எழும்பை
நாய்களுக்கிடுங்கள்
நன்றியாவது காட்டட்டும்..

நான்இறந்தபின்னும்
பசியாற்ற நினைக்கிறேன்...

மனிதனுக்காக அல்ல...

September 19, 2006

அவசரமாய் போய்கொண்டிருந்தேன்...

க(வி)தை..
------------
அவசரமாய் போய்கொண்டிருந்தேன்
என் கல்யாணத்திற்காக
ஆட்டோவில்..

இன்னும் பதினைந்து
நிமிடத்தில் கோயிலுக்கு
சென்றவுடன்
எனக்கும்
அவளுக்கும்
கல்யாணம்..

சந்தோசக் சிறகுகள்
செதில் செதிலாய்
வளர்ந்துகொண்டிருந்தது
என்னுள்..
என்னடா இது
நடுரோட்டில்
இவ்வளவு கூட்டம்..

ஆம் கண்டிப்பாக
விபத்தாகத்தான்
இருக்கவேண்டும்..

என் ஊகம்
சரியானதாகமாறியது...

ரத்த வெள்ளத்தில்
சின்ன சிறு
பள்ளிக் குழந்தை
மரணத்திடம் நடுரோட்டில்
மன்றாடிக்கொண்டிருந்தது...

சுற்றி இருந்தவர்கள்
பதரிக்கொண்டிருந்தனர்...

அட செ..மனிதனா நான்
அதை விலகி சென்றால்..

இல்லை மனிதநேயம்
மிக்க மனிதன் நான்..

நான் வந்தஆட்டோவை
குழந்தைக்குகொடுத்து விட்டு
நடுரோட்டில்நின்றிருந்தேன்..

விலகிய கூட்டம்
என்னை பெருமையாக
பார்த்தது..

உயிரை காப்பாற்றி
விடுவோம் என்ற
நம்பிக்கை
எனக்காக
காத்துக்கொண்டிருந்த
என் வருக்கால மனைவியை
ஞாபகப்படுத்தியது...

நல்லவேலை
அந்த வழியே
ஓர் ஆட்டோ
தேடி வந்தது..

செல்லும் இடத்தை
சொல்லி நிம்மதியாய்
கண் அயர்ந்தேன்..

இன்னும் சிறிதுநேரத்தில்
போய்சேர்ந்து விடுவேன்
கோயிலுக்கு..

அப்போது..
என்ன பெரும் சத்தம்
நான் போய்கொண்டிருந்த
ஆட்டோ குப்பிரக் கிடக்கிறது...

எதிரே லாரி நின்றுகொண்டிருந்த்து..
கோனளாக..

அதில் பயணித்த
ஓட்டுனரும்
நானும்இறந்துக்கிடக்கிறோம்..

அப்போது..நான்..

அவசரமாய் போய்கொண்டிருந்தேன்.

August 23, 2006

மரணம் மாண்டுபோனது...

மரணம்
மாண்டு போனது
கடைசி உயிரின்
மரணத்தில்

பிரபஞ்சத்தில்
உரக்கக்கூறி
வெடித்து சிதறியது
பூமி.....
"மாற்றம்ஒன்றேமாறாதது...."

குப்பைத் தொட்டி...

காதலும்
காமமும்
குப்பைத் தொட்டிகளில்
சங்கமித்துக்கொள்வாதால்
அங்கேயே பெற்றெடுத்து
விட்டுவிடுகிறது...

குப்பைத்தொட்டியில்
குழந்தை...

களம்.....

போர் களக்
குருதிக் குளங்களில்
எப்போதும்
சின்னஞ்சிறுமொட்டுக்கள்
தன்வேர்களை
ஊன்றிக்கொள்ள
மரணப்போராட்டத்தை
களங்களுக்கு நடுவே
நடத்திக்கொண்டுதான்
இருக்கின்றன....

January 12, 2006

மழைக்காலம்


தொலைவில்
இருந்து - நீ,
எனை ரசிப்பதை..

அருகினில்
காட்டிக்கொடுத்தது
ஒற்றை
மழைதுளி..