March 4, 2007

இசையானவள்


சுரங்களுக்கே
சுகமளிக்கும்
சூச்சமக்காரிக்கு

சுபமங்களம்
மட்டும்
வாசிக்கத்தெரியவில்லை
காதலுக்கு..

February 11, 2007

தனியாய்..

அழகாய் இருக்கின்றது
என்பதற்காக
பறித்தபூவை

என்னச்செய்வது
என்று
அறியாமல்
ஓசித்த நாட்களில்

தனியாய் அழுததுண்டு
தனிமையில்..

February 6, 2007

கொன்றுவிடு என்னை

இப்போதே
என்னைகொன்றுவிடு..

தினம் தினம்
உன் விழி போர்படைகள்
புடைத்தெடுத்துவிடுகின்றன.

உயிரை
ஒழித்துவைத்துக்கொண்டு
பார்க்க வேண்டியதாய் உள்ளது
உன்னை.

February 5, 2007

மனிதன்

மன்னிப்பவன்
மனிதன்

மன்னிப்புகேட்க
நினைப்பவன்
பெரியமனிதன்.

February 4, 2007

யாரிடமும் சொல்லிவிடாதே

கடவுளிடம் மன்றாடி
வரமொன்று பெற்று
பெண்ணாய்
பூமிக்குவந்தது
மேகமொன்று..

எங்கெங்கோ வாழ்ந்து
புகழாரம் சூட்டிய
அழகோடு
என்னவள் வசிக்கும்
ஊருக்கு வந்தது..

வழியில்
அவளைகண்டபோது
அவளழகில் மயங்கி-
பின் நாணி
கடவுகளை அடைந்தது..

அவளை விட
அழகாய் மீண்டும்
தருவிக்க சொன்னது
மேகம்.

உலகில்
அவளுக்கு இணையாய்
இன்னொரித்தியை
பிரசுவிக்க முடியாது
இருந்தாலும்
நீ இரண்டாம் அழகி..

என்றாறம் கடவுள்.

தன் ஆசை விடுத்து
மீண்டும் மேகமானது
மேகம்..

இப்போதும்
நிறைவேராத
ஆசை எண்ணி
அழுது வடிக்கின்றது
கண்ணீரை
மழையாய்..

ஒரு மழைகால நேரத்தில்
என் காதோடு
சொல்லிச்சென்றது
மேகம்
யாரிடமும் சொல்லிவிடாதே
என்று.

February 2, 2007

கட்டுண்டு

கட்டுண்டு
கிடக்கிறது
காலம்
படைப்பாளியிடம்

முக்காலத்தையும்
அறிந்தவன்
என்பதற்காக
மட்டுமில்லை

அவைவிட
தன்னை யாராலும்
பகிர்ந்து கொள்ள முடியாது
என்பதற்காக.!

நீயிருக்கும் தூரத்தில்

மன்றாடிக் கேட்ட
நிலாவிற்காய்
உனை வர்ணித்த
கவிதையில் - நிலா
இப்படியாக
பெருமைத்தேடிக் கொண்டது.

நீயிருக்கும் தூரத்தில்
நிலா.

January 30, 2007

ஒர் தேவதை


நிலவொளியில்
எப்போதெல்லாம்
உன்னை என்னி
வெளிர்கிறேனோ

அப்போதெல்லாம்
எனக்கு பின்னால்
சிறகைவிரித்த
ஒர் தேவதை
கண்ணீர் வடிக்கின்றாள்.

காத்துக்கொண்டிருந்தபோதுதான்


உனக்காய்
காத்துக்கொண்டிருந்தபோதுதான்
காதலிப்பதற்கும்
காதலிக்கப்படுவதற்கும்
இடையிலான மிகப்பெரும்
வித்யாசம் அறிந்தேன்..!

உன்னால் மட்டும் !


உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது

எந்தபூவை
சூடினாலும்
இரண்டாமிடத்துக்கு
தள்ளிவிடுகிறாய்..?

January 29, 2007

மீராவுக்காக...


தம்புராக்கள்
ஏங்குகிறது
மீராவுக்காக...

மீராவோ
செல்போன் பிடியில்?

January 27, 2007

தொலைந்த தொப்புள் கொடி..

உறவுகள் தேடி
ஓடாய் தேய்த - ஒரு
உயிரின் ஓளமிது..

தொப்புள் கொடியை
தொலைத்த முதலே
தொலைவில் தெரியும்
தொலைந்த விடியலை - தேடும்
தோய்ந்த உயிரிது...

அம்மா என்றேன்
அம்மாவிடம் அல்ல
ஜய்யா என்றேன்
அப்பாவிடம் அல்ல
அண்ணா என்றேன்
அண்ணன் அங்கில்லை
அக்கா என்றேன்
அவளும் சொந்தமில்லை...

இருந்தும்
சில நொடி உறவுகள் -எனை
மெல்ல திண்ணத் துடிக்கும்
வயிற்று பசிக்காக....

பால் சோறு உண்டதில்லை
தாலாட்டும் கேட்டதில்லை
படுத்துறங்க தோளுமில்லை
விடைக்கான வழியுமில்லை
விடிந்தாலும்- எனக்கு
விடியலில்லை...

எஞ்சிய சோறும்
எச்சில் இலையும்
எப்போதும் எனக்காய்
எங்கேயும் காத்திருக்கவில்லை....

இவற்றை நம்பியே
இரவல் உயிரை
இன்னமும் வாழவைகிறேன்...

மாமனில்லை
மதனி இல்லை
தாத்தா பாட்டி
பார்த்ததில்லை....

இன்னும் கிடைக்காத
உறவுகளுக்கு
தெரியாத பெயர்கள்....

தாய்முகம் பார்ததில்லை
தாய்மொழியும் அறிந்ததில்லை
தகப்பனார் தெரியவில்லை
தாகம் தான் திறவில்லை...

அனாதை தனிமைக்குள்
அரசாலும் ராஜாவாய்
அண்ணமிட்ட ஆன்மாக்கள்
அன்றைய உறவுகளாய்..

குப்பை தொட்டிகள்
கோயில் மதில் சுவர்கள்
யாருமற்ற மணல் மேடுகள்
இவைகள்-
பெற்றெடுத்த
சிற்றரசர்கள்
சில்லறைக்காக - இன்னமும்
சிணுங்கிக்கொண்டு தான்
சீருகிறார்கள்....

ஒரு நிமிட உறவால்
முறை தவறிய உன்னால்

உறவுகளைதொலைத்து - என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்...

உன்னையும் தான்...

January 26, 2007

காகித கருவறைகள்


சிலருக்கு சில
உறுப்புக்கள்
தேவையற்றது -
ஆறாம் விரல்போல்!

எனக்கு
கருவறை...

எனக்கும்
பாஞ்சாலிக்கும்
வித்தியாசம்
உண்டெண்றால்
அவள் பத்தினி
நான் ?????

வினாக்குறிகள்
மட்டுமே
விடையாய்
முளைக்கின்றன!

என்
கருவறையை
காகிதமாய் கசக்கியதில்
உனக்கும் பங்குண்டு
என்னவனே!

சாட்சி
என்(?) குழந்தை!

January 24, 2007

அபாய அறிவிப்பு !


காதல் புயலில்
மாட்டிக்கொண்டது
மனசு காற்றாலை!

அபாய
அறிவிப்பையும் மீறி
கொடுத்துக்கொண்டிருந்த்து
ஆசை மின்சாரத்தை!

January 23, 2007

இல்லாமையின் சுகம்


வறுமை என்னை
வாரிக்கொண்டபோதுதான்
பசியின் அருமை தெரிந்தேன்..

இளமை என்னை
கடந்தபோதுதான்
முதுமையின் வலிமை அறிந்தேன்..

காதல் என்னை
வெறுத்தபோதுதான்
அன்பின் தாக்கம் புரிந்தேன்..

இப்படி
எல்லாவற்றையும்
இழந்தபோதுதான்
இல்லாமையின்
சுகமறிந்தேன்.!

January 16, 2007

சொர்கத்தின் வாசலிலே..


அகால மரணம் எனை அவசரமாய் அள்ளிப்போட்டுக் கொண்டதால்அழுது புலம்புகிறேன்,, சொர்கத்தின் வாசலிலே...
கதவுகள் இன்னும் திறக்கப்படவிலலை மனக்கவலை இன்னும் தீரவில்லை, பேருள்ளம் கொண்டவர்களே கொஞ்சம் நியாயத்தை சொல்லுங்கள்..

இரண்டு மாதத்துக்கு முன்னர் திருமணம் நிச்சியக்கபட்ட புதுமாப்பிள்ளை நான், இப்போது சொர்கத்தின் வாசலிலே..,

நிச்சயக்கபட்ட நாள் முதலே காதலர்களாய் கவிதை பாடிவந்தோம், என் வாழ்க்கை சக்கரத்தில் ஆரங்களாய் தாய்,தந்தை, ஓர் பாசமான தங்கை, அச்சானியாக வருங்காலத் துணைவி, இவர்களுக்காகவே வண்டியை ஓட்டும் பொருப்புள்ள சராசரி மனிதன் நான், எனக்கு ஏன் இத்த சோதனை..

என் நிச்சியத்தின் போதே, என் உணர்வுகளுக்கெல்லாம் தன் உதிரத்தை உரமாக்கியத் தாய், உயிரை எமனிடம் உயிலெழுதி வைத்துக்கொண்டிருந்தாள். அந்த ஒப்பற்ற உத்தமிக்காய் நிச்சியக்கப்பட்ட உள்ளங்களின் இணைப்பு இது..

எங்களை விட்டு பிரியும் வேலையிலும், ஓயாது உழைத்து கொண்டிருக்கும் தன்னலம் பாரா தாய் அவள்.நான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாலும் விழி முடாது காத்திருக்கும் கருனை அவள். என் தந்தை ஒன்றும் சலைத்தவர் அல்ல, என் இதயக்கூட்டில் விடி வெள்ளியாய் வழிகாட்டும் கடவுள் அவர்.
என் சொர்வுகளுக்கெல்லாம் சொப்பனமாய், என் தங்கை. துள்ளித்திரியும் கடை முயல் குட்டி அவள்.என்னுள் இருந்த இரண்டாம் கவியை கண்டுணர்ந்தவள் காதலி, ஆம் எங்களின் இரண்டாம் தாய்..

இவ்வளவும் வாய்த எவனுக்கும் சொர்கம் பூமியிலே...

ஓர் மழைக் கால இரவு நேரம், அலுவலகத்திக்கு அவசர அலைப்பு, தாய் நம்மை விட்டு பிரிந்து கொண்டிருக்கிறாள்,,, உனை காண துடித்துக்கொண்டு..
அடித்து பிடித்து மொப்பட்டை எடுத்தேன், துக்கம் நெஞ்சை கனமாக்கியது,, தாயே கொஞ்சம் பொருத்துக்கொள் இதோ தலைமகன் புயலென புறப்படுகிறேன்.. கண்கள் மட்டும் சாலையில், எண்ணம் எல்லாம் தாய்மையில்..

காற்றும் மழையும் மின்னலுடன் போட்டியிட்டுக்கொண்டிருத்த்து,,,தாயே கொஞ்சம் பொருத்துக்கொள்.?

வெட்டிய மின்னல் ஒன்று, என் தலையில் தடவிக்கொடுத்தது..
அகால மரணம் அவசரமாய் அள்ளிப்போட்டுக் கொண்டது...இப்போது சொர்கத்தின் வாசலிலே... அழுது புலம்புகிறேன் முகம் கானமுடியாத் தாயின் முகத்துக்கா,,

என் தாயை கண்டால் கொஞ்சம் அசுவாசப்படுத்துங்கள்..
தயவு செய்து நான் இங்கிருப்பதை சொல்லிவிடாதீர்கள்..

சரி நான் வருகிறேன்..

// சொர்கத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது.. அங்கே இருகரம் நீட்டி தாய் அவனை அழைத்து கொல்கிறாள்.

தாய்மை - தன்னலம் பாராத பாசவலை
காதலி - இன்னும் தாயகவில்லை //

January 13, 2007

அவளிடம் சொல்லிவிடதே


நமக்குள் மட்டும்...

மிதமான மின்னலும்
இதமான புயலும்
மனசுக்குள் மையம்
கொண்ட கார்காலம்...

மின்சாரம் இல்லாமல்
விளக்குள் இல்லாமல்
நம்மை சுற்றிவட்டமிடும்
இலட்சம் மின்மினிகள்..

கண்கள் மட்டும்
விழித்திருக்க
வழியெங்கும்
நானும் நீயும்
நம்மை தேடிக்கொண்ட
காதல் காலம்...

உன் மைவிழி
அடித்த தந்திகளை
தவறாமல் - என்
உயிர் மூச்சு
வாங்கிக்கொண்டதும்..
நான் அனுப்பிய
உன் நினைவுகளை
நீ வருடுவதும்..
நம்முள் வசந்தகாலம்.

சூடாகி தூளன-
நெஞ்சங்கள்
உயிரால் உரவாடிய
இதமான மழைக்காலம்..

எனக்காய்
என்னுள் வாழும்
என்னவளின்
நினைவே

அவளிடம்
சொல்லிவிடதே
எனக்கானவள்
நீயென்று..

January 11, 2007

பட்டாம்பூச்சி


ட்டாம்பூச்சியே..

என் உயிரிலிருந்து
உனை
விடுவித்துக் கொண்டாலும்

நீ பதித்த காச்சுவடுகள்
என் மனதிலிருந்து
மறைந்துவிட மறுக்கிறது..

நீ
பயணிக்கபோகும்தூரம்
எதுவாய் இருந்தாலும்

என் மனமகரந்தங்கள்
உன் கால்களில்
ஒட்டியே கிடக்கும்..

January 10, 2007

அறிவிப்பு



ன்னிக்கப்பட்ட
தவறுகள்
தண்டனைகளை
அறிவிக்கிறது..

தண்டிக்கப்பட்ட
தவறுகள்
மாற்றுவழிகளை
அறிவிற்கின்றன..

January 8, 2007

பருக்கள்....

னவில் நேற்று
தொலைந்து போனேன்....
தெரியாத ஊரில்
தனியே நான்

தொலை தூரம்
நடந்துவிட்டேன் -ஆதாரமாய்
பாதத்தில்எண்ணற்ற
முற்கள்....

திடிரென என்னை
சுற்றிகூட்டம்
"நான் எங்கிருக்கிறேன்?
நீங்கள் யார்?"
பதில் ஒன்றும்
வரவில்லைஅவனிடம்
முகம் திருப்பிக்கொண்டான்
பின்பக்கம் கண்கள்
கவனிக்க தவறினேன்....
முன் உண்டோ கண்?

முயற்று பார்த்ததில்
குழந்தை ஒன்றிடம்
"ஊர் என்ன?
உன் பேரென்ன?"
என் கேள்வி -பதில்வருமுன்னே
எனை தேடிநான்கு பேர்......

தூக்கி சென்றுகிடத்தினர்
தனியே -
எனை சுற்றிவெளிச்சம்
அவர்கள்இருளாய்.....

அருகில் குழி பரிக்கப்பட்டது
மறுபடியும் அதேகேள்வி
பதில் இல்லை அவர்களிடம்
அவர்களே இனி பேசட்டும்....

குழியுனுள் நான்அவர்களே
இனி பேசட்டும்....

மண் மூடி புழுக்கள்
கன்னத்தை பதம்பார்கிறது
அவர்களே இனி பேசட்டும்....

கரையான் கால்
கட்டைவிரலை
அறிக்கின்றது

உத்ரி எழுந்து
கண்விழித்தேன்....

எதிரே கண்ணடி
முகத்தில் பருக்கள் !

ஜென்மம் ஏழுகொண்டேன்



நெற்றியில் பொட்டுமிட்டு
வெய்குழல் தாந்திருத்தி
வட்டக்கரிய விழி- கண்ணம்மா
எனை கட்டி இழுக்குதடி!

பட்டு துணியுடுத்தி
பாத சலங்கை நீபூட்டி
வெட்டும் மின்னலடி- கண்ணம்மா
உன் சுந்தர நடையழகு!

வண்ணக்குஞ்சம் கட்டி
வாரிமஞ்சள் நீபூசி
கொத்தும் பாம்படியோ- கண்ணம்மா
உன் பின்னல் ஜடையழகு!

மெத்த மத்தளமோ
எழில்மொத்தம் பின்னழகே
கொட்டும் முரசடியே - கண்ணம்மா
உன் முட்டும் முன்னழகே!

உனை தீண்டும் போதினிலே
நீ சுடும் தீஞ்கனலே
சொல்லும் மொழிகளிலே- கண்ணம்மா
தேன் தமிழ் மொழியழகே!

ஜென்மம் ஏழுகொண்டேன்
காதலை நெஞ்சில் கண்டேன்
சுத்தரி நீ இல்லையென்றால் -கண்ணம்மா
சொர்கத்தை அடைந்திடுவேன்!

மலடி


என் பேனா மனைவி
பெற்றெடுத்த குழந்தைகளில்
பிழை ஏற்பட்டால்
அழிக்க முற்படுவதில்லை
திருத்தவே முயல்கிறேன்..

கவிதை தந்தை மட்டும்
தன் படைப்புகளை
எனக்கு
புலப்படாமல் வைத்திருந்தால்

என்
பேனா மனைவி
இன்னமும் மலடியாகத்தான்
இருந்திருப்பாள்..

January 6, 2007

மீய்த்தெள


என்னுள்
கருப்பு காலங்கள்
மனசுடன்
மல்லுக்கு நிற்கிறது..

நான் மறைத்த
குற்றத்திற்காக அல்ல
மீய்த்தெள வேண்டி..

January 4, 2007

மகாத்மாவுக்காக அல்ல


தோழா!
அகிம்சை என்னுள்
ஆறாக்காயமாய்
அவமாணங்களையே
பரிசளிக்கிறது..

சமுதாயம்
வன்முறையையும்
வக்கிரத்தையம்
ஏவியே விடுகிறது..

இருந்தும் மெளனமய்
என்னுள் அழுகின்றேன்..

கற்றுத்தந்த
மகாத்மாவுக்காக அல்ல

என்னுள் கோட்சே
பிறந்துவிடக்கூடாது
என்பதற்காக..

January 3, 2007

என் கண்மனி நீயடி


இப்போதெல்லாம்
யாரையும் நிமிர்ந்து
பார்பதில்லை நான்..

என்
கண்களை பார்த்தே
உன்னை
கண்டுபிடித்துவிடுவார்கள்
என்று..

தெரிந்த தெரியாதவைகள்



நீ விரும்புவது
என் கவிதைகளை
என்று எனக்கு
தெரியும்..

உனக்கு தெரியுமா?
நான் விரும்புவது
உன்னை என்று..!

தனிமையில்

நீ
இதழ்பிரிக்காமல்
உதிர்த்துவிடுகிறாய்
சொற்களை
உன் கண்களில்

தனிமையில்
சத்தமிட்டுக்கொள்கிறேன்
உன் பெயர்சொல்லி
நான்..