September 26, 2006

தன்னலதாயின் உறவுகளில்..

தன்
மாரழகுக்கு வேக்யானம்
கற்பித்து
சேய்யழ்கை
சீக்கில்விட்டுவிட்டு

தாய் உறவை
தவிடாய் காற்றில்
விட்ட
தன்னலதாயின்
உறவுகளில்

மார்பு காம்புகளுக்காய்
ஏங்கும் - நாங்கள்
எந்தஉறவுகளை
நம்பிகைபிடிப்பது
இவ்வுலகில்

தன்னினப்பாலை
தவிர-எவ்வுயிரும்
ஈந்ததில்லை
பிற உயிரிடம்
மனிதனை தவிர...

ஒட்டுக் கோவணத்தில்
ஒட்டிய காசுக்காய்
ஒன்டிய கூட்டத்தில்
விலை போனாயோ -தாயே

மனம் மாண்ட
மனிதத் தாய்களே
உங்களை விட
நாய்கள் எவ்வள்வோ
மேல்....

உறவுகள் ஊருக்காக...

அப்பாவின் உடலில்
நெஞ்சு தீப்பற்றி
எரிகிறது

உடல் வெந்து
உருக தொடங்கியது
நெற்றி சுருங்கி
வேகத்தடையாகிறது
மயிர் கால்கள்
மாண்டு போகிறது
விரல் நகங்கள்
வீழ்ந்து கிடக்கிறது
மூட்டு கின்னங்கள்
முடங்கி கொள்கிறது
முதுகுத் தண்டு
எழுந்து நிக்கின்றது.......

சடலம்சுடப்பட்டது -
வெட்டியான்
மேற்பார்வையில்

பெயர் பலகை
அகற்றப்பட்டது
மதில் சுவரில்

தபால்காரரின்
வசதிக்காக....!

உறவுகள்
ஊருக்காக...

தாய்மடி வாசம்

தாய்மடி வாசம்
தரனியில் தேடி
தவழ்ந்துகொண்டிருப்பவன்
நான்...

எப்போதவது
கிடைக்கக்கூடும்....

அதுவரை
பொரு மனமே..

தாய்மடி வாசம்
தருபவள்
மனைவியாககூட
இருக்கக்கூடும்....

எனெனில்
வேண்டி பெருவதே
வாழ்க்கை என்பதால்...

எதுவோ அதுவே,,

எதை
எடுத்தாயோ
அது
என்னுள்லிருந்தே
எடுக்கப்பட்டது...

எதை
மறுக்கிறாயோ
அது
என்னுள்ளேயே
புதைக்கப்படுகிறது

எதுவோ
அதுவே
காதலாகி
கசிந்து
என்னுள்
கனிகிறது...

படுக்கையில் நான்...

படுக்கை
துறந்து
பல்துலக்குகிறேன்
கண்ணாடி
முன்

படுக்கையில்
நான்
கண்ணாடியில்

கையில்
காணவில்லை
பல் துலக்கி

படுக்கையில்
நான்...

எனக்காய்

எனக்காய்
ஏங்குகிறது..

பூமாலை
பூக்கடையில்
புது வேட்டி
துணிக்கடையில்

மேளதாளங்கள்
மத்தளக்காரனிம்
பழைய நாற்காலி
பரண் மேல்

இருந்தும்
நடை பிணமாய்...

மனிதனுக்காக அல்ல...

நான்
என்ன செய்துமுடித்தேன்
என்று
என்னை சுற்றி இவ்வளவு
கூட்டம்..
நான்
என்ன சொல்லிவிட்டேன்
என்று நாற்காலி
வனப்பில்ஒய்யாராமய்
நான்..
நான்
எங்கே போகிறேன்
என்றுவண்ணம்
தரித்த பல்லாக்கு
முன் எல்லோரும்...

நிருத்துங்கள்
இந்த
கோமாளித்தனத்தை...
வாசியுங்கள் - என்
மரண வாக்கு மூலத்தை..

மகாத்மாக்களுக்கு
இடையில்-எனை
புதைத்து விடாதீர்கள்
ஜாபாவான்களுக்கு
மேல் வைத்து
எரித்துவிடாதீர்கள்..

மலை உச்சிமேல்
இருந்துஉருட்டி விடுங்கள்
பிணம் திண்ணும்
கழுகளுக்கு இறையாகுகிறேன்..

வழி நெடுக
மலர் தூவி
வண்டுகளை
பட்டினி போடாதீர்..

சதையருது
குளத்தில்இடுங்கள்
மீன்கள் பசியாரட்டும்..

மிஞ்சிய எழும்பை
நாய்களுக்கிடுங்கள்
நன்றியாவது காட்டட்டும்..

நான்இறந்தபின்னும்
பசியாற்ற நினைக்கிறேன்...

மனிதனுக்காக அல்ல...

September 19, 2006

அவசரமாய் போய்கொண்டிருந்தேன்...

க(வி)தை..
------------
அவசரமாய் போய்கொண்டிருந்தேன்
என் கல்யாணத்திற்காக
ஆட்டோவில்..

இன்னும் பதினைந்து
நிமிடத்தில் கோயிலுக்கு
சென்றவுடன்
எனக்கும்
அவளுக்கும்
கல்யாணம்..

சந்தோசக் சிறகுகள்
செதில் செதிலாய்
வளர்ந்துகொண்டிருந்தது
என்னுள்..
என்னடா இது
நடுரோட்டில்
இவ்வளவு கூட்டம்..

ஆம் கண்டிப்பாக
விபத்தாகத்தான்
இருக்கவேண்டும்..

என் ஊகம்
சரியானதாகமாறியது...

ரத்த வெள்ளத்தில்
சின்ன சிறு
பள்ளிக் குழந்தை
மரணத்திடம் நடுரோட்டில்
மன்றாடிக்கொண்டிருந்தது...

சுற்றி இருந்தவர்கள்
பதரிக்கொண்டிருந்தனர்...

அட செ..மனிதனா நான்
அதை விலகி சென்றால்..

இல்லை மனிதநேயம்
மிக்க மனிதன் நான்..

நான் வந்தஆட்டோவை
குழந்தைக்குகொடுத்து விட்டு
நடுரோட்டில்நின்றிருந்தேன்..

விலகிய கூட்டம்
என்னை பெருமையாக
பார்த்தது..

உயிரை காப்பாற்றி
விடுவோம் என்ற
நம்பிக்கை
எனக்காக
காத்துக்கொண்டிருந்த
என் வருக்கால மனைவியை
ஞாபகப்படுத்தியது...

நல்லவேலை
அந்த வழியே
ஓர் ஆட்டோ
தேடி வந்தது..

செல்லும் இடத்தை
சொல்லி நிம்மதியாய்
கண் அயர்ந்தேன்..

இன்னும் சிறிதுநேரத்தில்
போய்சேர்ந்து விடுவேன்
கோயிலுக்கு..

அப்போது..
என்ன பெரும் சத்தம்
நான் போய்கொண்டிருந்த
ஆட்டோ குப்பிரக் கிடக்கிறது...

எதிரே லாரி நின்றுகொண்டிருந்த்து..
கோனளாக..

அதில் பயணித்த
ஓட்டுனரும்
நானும்இறந்துக்கிடக்கிறோம்..

அப்போது..நான்..

அவசரமாய் போய்கொண்டிருந்தேன்.